Sunday, 8 September 2024

விநாயகர் / We நாயகர்

 

விநாயகர் / We நாயகர்

விழாவின் நாயகர் விநாயகர் என்றதும் விழாவிற்கு we நாயகர் என்கிறீர்
வினை தீர்க்கும் பிள்ளையார் என்றதும்
வினை தீர்க்காத பிள்ளை யார் என்கிறீர்
கணத்திற்கு அதிபதி கணபதி என்றதும்
பணத்திற்கு அதிபதி பணபதி என்கிறீர்
அரசமரத்தடி ஆனைமுகன் என்றதும்
அரசாணைப்படி பிணைமகன் என்கிறீர்
முக்கடலில் கரைந்தார் அண்ணன் என்றதும்
முத்தமிழில் கலந்தார் தம்பி என்கிறீர்!

- தஞ்சை த.இராமநாதன்

4 comments: