நாணயம்
நாட்டுக்கு நாடு மதிப்புக்கு மிகவும் தேவை நாணயம்
நாட்டின் மதிப்புக்கு நாட்டுக்கு மிகவும் தேவை நாணயம்
மனிதன் நாணயத்துடன் வாழ மிகவும் தேவை நாணயம்
மனிதன் நா நயத்துடன் பேச மிகவும் தேவை நாணயம்
நீதியோடு நேர்மை சேர்ந்திட மிகவும் தேவை நாணயம்
நிதியோடு கருணை சேர்ந்திட மிகவும் தேவை நாணயம்
உலக சந்தை நிர்ணய மதிப்புக்குத் தேவை தங்க நாணயம்
உளச் சொந்த நிர்மாண சோதிப்புக்குத் தேவை உங்க நாணயம்
பண்பில்லாதவரிடம் பணமாக வந்து சேருவது பந்தாவான நாணயம்
அன்புள்ளவரிடம் தானாக வந்து சேருவது பண்பான நாணயம்!
- தஞ்சை த இராமநாதன்

Super!👌
ReplyDelete🙏🙏
ReplyDeleteநயம் பட உரை என்பதற்கு தங்களின் படைப்பு நல்ல எடுத்துகாட்டு. 👏🤝
ReplyDelete🙏🙏
ReplyDeleteஅருமை
ReplyDelete🙏🙏
ReplyDelete