உயிரைக் காக்கும் நெல் மணிகள்
நாற்றங்காலில் கால் பதித்து
காலை முதல் மாலை வரை உழுது
உழப்பட்ட சேற்றைச் சமப்படுத்தி
நன்னீரை நிரப்பித் தெளிய வைத்து ஊறி முளை விட்ட விதையை எடுத்து
கூடையில் வைத்துச் சுற்றி விதைத்து
பருவம் வரும்வரை நாற்றை வளர்த்து
பருவம் வந்தபின் நாற்றைப் பறித்து
வயலின் உழையில் நடவை முடித்து
நீர்ப் பாய்ச்சி வரப்பு மிதித்து வளர்த்து
உரத்தை வீசிக் களையைப் பறித்து
பயிரைக் காக்கப் பூச்சி மருந்து தெளித்து
கருக்காய் ஆகாமல் நெல்மணிக் காத்து
பொன்னிறமாகும் கதிரைப் பார்த்து
கதிர் அரிவாள் வைத்து அறுத்து எடுத்து
அரி அரியாய் வயலில் பரப்பி வைத்து
கட்டுக் கட்டாய்க் கட்டி தலையில் தூக்கி
களம் கொண்டுபோய் அரியை அடித்து
உதிர்ந்த நெல்லை பொலியில் குவித்து
கூடை நெல்லை தோளில் அணைத்து
காற்றோடு பதரைப் பறக்க வைத்து
முறம் கொண்டு பதரை வீசி எடுத்து
கட்டிய மூட்டையில் அழகாய் இருந்து
மனித உயிரைக் காக்கக் காத்திருப்பது அரிசி தரும் பொன் நிற நெல் மணிகள்!
- தஞ்சை த இராமநாதன்

நெற்களஞ்சிய பெருமையை நிறைவாக சொன்னதற்கு நன்றி
ReplyDelete👍👍
Deleteஅந்தகாலம் மாரிபோச்சு.எல்லாம் எந்திரமயமாகிவிட்டது.வாழ்த்துகள்!
ReplyDelete👍👍
DeleteLooks again start nature agriculture with new name of Organic
ReplyDelete👍👍
Delete