இத் தையில் எவ்வழிப் பிறந்தது?
வருடந்தோறும் பொங்கல் வந்தாலும்
பொங்கும் உள்ளங்களிலும் மாற்றமில்லை
வருடந்தோறும் பொங்கி வந்தாலும்
பொங்கும் இல்லங்களிலும் மாற்றமில்லை
நாட்டுக்கு நாடு பொங்கல் வைத்தாலும்
நாட்டு மக்களிடமும் நல்ல மாற்றமில்லை
வீட்டுக்கு வீடு பொங்கல் வைத்தாலும் வீட்டு மக்களிடமும் நல்ல மாற்றமில்லை
தெருவோரம் அமர்ந்து கிடந்து அயர்ந்து
மூச்சை விடுவோரிலும் மாற்றமில்லை
ஏய்த்துப் பிழைக்க ஏற்றத் தொழிலைச் செய்து ஏமாற்றுவதிலும் மாற்றமில்லை
கண்ணியத்துடன் கடமையைச் செய்து ஏமாறுவதிலும் மாற்றமில்லை
மாட்டுப் பொங்கலுக்கு மாடு தொட்டித்
மாட்டுப் பொங்கலுக்கு வீடு புட்டித்
- தஞ்சை த இராமநாதன்

Arumai 😌😊
ReplyDelete🙏🙏
Delete