காவிரியை வைத்து அரசியல்
வருடந்தோறும் காவிரிப் பிரச்சினையை ஆரம்பித்து வைப்பது அரசியலின் சதி
வருடந்தோறும் காவிரிப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது இயற்கையின் விதி
கொடு கொடு எனப் போராட வைப்பது இந்தப்புற கேட்டிடும் அரசியல்
தடு தடு எனப் போராட வைப்பதோ அந்தப்புற தடுத்திடும் அரசியல்
காவிரி காய்ந்து போனால் சூடாகிப் படுத்திவிடும் அரசியல்
காவிரி பாய்ந்து போனால் குளிராகிப் படுத்துவிடும் அரசியல்
தந்திரமாக அணையை நிரப்பிட வழிந்தோடு காவிரித் தாயே!
நிரந்தரமாக அரசியலை நிறுத்திட மகிழ்ந்தோடு காவிரித் தாயே!
- தஞ்சை த.இராமநாதன்

TN Govt don't want to save rain water . What to do?
ReplyDelete🤝🤝
ReplyDelete