உணர்வோடு ஒளி சேர்ந்த இதயத்தைத் தூய்மைப்படுத்திடணும் இத்தீபாவளி
பழமையும் புதுமையும் கலந்த இவ்வுலகை வாழ்விக்க வித்திடணும் இத்தீபாவளி
உழைத்துக் களைத்து இளைத்தோரை நல்வழிப்படுத்திடணும் இத்தீபாவளி
ஏய்த்துப் பிழைத்துக் கூத்தாடுவோரை மெய்வழிப்படுத்திடணும் இத்தீபாவளி
இருள் அகன்றிட நல் அருளைக் கொடுத்திடணும் இத்தீபாவளி
இல்லாமை அகன்றிட வெள்ளாமைக் கொடுத்திடணும் இத்தீபாவளி
முயலாது முடியாத இயலாமையை இல்லாது ஆக்கிடணும் இத்தீபாவளி
வறுமைக் கொடுமையே இல்லாது பெருமை ஆக்கிடணும் இத்தீபாவளி
தெரிந்து அறிந்த பொறாமையை அடியோடு அகற்றிடணும் இத்தீபாவளி
துணிந்து கொல்லும் பொல்லாமையை முடிவோடு அழித்திடணும் இத்தீபாவளி
உடலோடு உள்ளத்தையும் இல்லத்தோடு அகிலகத்தையும் சுத்தமாக்கிடணும் இத்தீபாவளி!
- தஞ்சை த இராமநாதன்

அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!! உங்கள் தமிழ் பனி தொடர !!
ReplyDelete🙏🙏
DeleteGood to read your post, not sure where you get so much time
ReplyDelete🙏🙏
Delete👌
ReplyDelete🤝
ReplyDeleteHappy Diwali 👌🤝💫💫
ReplyDelete🤝🤝
ReplyDelete