Monday, 13 November 2023

தமிழரும் தீபாவளியும்

 

தீபாவளி தமிழர் பண்டிகைக் கிடையாது        அதைக் கொண்டாடக் கூடாதென்றால்
சாராய விற்பனை ஆண்டுக்கு ஆண்டு
தீபாவளிக்கு அதிகரிக்கிறதென்றால்
சாராயம் குடித்து குதூகலமாய்க் கொண்டாடுபவர்கள் தமிழர்கள் இல்லையா? சாராயத்தை விற்றுப் பிழைப்பவர்களில் தமிழர்களே இல்லையா?

தீபாவளி தமிழர் பண்டிகை இல்லவே இல்லையென உரக்கக் கத்தினாலும்
வெடி விற்பனை ஆண்டுக்கு ஆண்டு தீபாவளிக்கு அதிகரிக்கிறதென்றால்
வெடியை வெடித்து அமர்க்களமாய்க் கொண்டாடுபவர்கள் தமிழர்கள் இல்லையா?  வெடியை விற்றுப் பிழைப்பவர்களில் தமிழர்களே இல்லையா?

தீபாவளி தமிழர் பண்டிகை இல்லவே இல்லையெனத் தெருவெங்கும் கூவினாலும்
ஆடை விற்பனை ஆண்டுக்கு ஆண்டு தீபாவளிக்கு அதிகரிக்கிறதென்றால்
வாங்குபவர்கள் தமிழர்கள் இல்லையா? ஆடையை விற்றுச் சம்பாதிப்பவர்களில் தமிழர்களே இல்லையா?

தீபாவளி தமிழர் பண்டிகை இல்லவே      இல்லையெனச் சொல்லும் சிலர்கள் தீபாவளியைக் கொண்டாடும் பலரின் வாக்கு தேர்தலில் வேண்டவே வேண்டாமெனச்  சொல்லி முழக்கமிட முனைவார்களா? 

அந்தச் சிலர் பலரை அவமானப்படுத்தினால் பாரினில் பலவாறு அவமானப்படுவார்கள்!

- தஞ்சை த.இராமநாதன் 

No comments:

Post a Comment