Saturday, 11 November 2023

திருத்தட்டும் இத்தீபாவளி

 

உணர்வோடு ஒளி சேர்ந்த இதயத்தைத் தூய்மைப்படுத்திடணும் இத்தீபாவளி

பழமையும் புதுமையும் கலந்த இவ்வுலகை வாழ்விக்க வித்திடணும் இத்தீபாவளி

​உழைத்துக் களைத்து இளைத்தோரை நல்வழிப்படுத்திடணும் இத்தீபாவளி

ஏய்த்துப் பிழைத்துக் கூத்தாடுவோரை மெய்வழிப்படுத்திடணும் இத்தீபாவளி

​இருள் அகன்றிட நல் அருளைக் கொடுத்திடணும் இத்தீபாவளி

இல்லாமை அகன்றிட வெள்ளாமைக் கொடுத்திடணும் இத்தீபாவளி

​முயலாது முடியாத இயலாமையை இல்லாது ஆக்கிடணும் இத்தீபாவளி

வறுமைக் கொடுமையே இல்லாது பெருமை ஆக்கிடணும் இத்தீபாவளி

​தெரிந்து அறிந்த பொறாமையை அடியோடு அகற்றிடணும் இத்தீபாவளி

துணிந்து கொல்லும் பொல்லாமையை முடிவோடு அழித்திடணும் இத்தீபாவளி

​உடலோடு உள்ளத்தையும்                இல்லத்தோடு அகிலகத்தையும் சுத்தமாக்கிடணும் இத்தீபாவளி!

- தஞ்சை த இராமநாதன்


8 comments: