Sunday, 26 November 2023

ஆவண செய் ஆதிசிவனே!

 

ஆவண செய் ஆதிசிவனே!

விட்டுக் கொடுத்து விருப்பங்கள் நிறைவேறட்டும்
தட்டிக் கொடுத்து திருப்பங்கள் உருவாகட்டும்

காப்பாற்றும் எண்ணம் தரணியில் ஓங்கட்டும்
ஏமாற்றும் எண்ணம் பரணியில் தூங்கட்டும்

அம்பைத் தொடுத்து உயிரைக் கொல்லும் கூட்டம் குறையட்டும்
அன்பைக் கொடுத்து உலகை வெல்லும் கூட்டம் நிறையட்டும்
 
கார்த்திகைத் தீபத் திருநாளில் ஆதிசிவன் ஆவண செய்யட்டும்!

- தஞ்சை த.இராமநாதன்

4 comments: