Wednesday, 1 November 2023

ஆம்பலாப்பட்டு காயாவர்ணம் கண்டியர்

 

ஆம்பலாப்பட்டு காயாவர்ணம் கண்டியர்

தன் மானத்திற்காகச் சிவப்புத் துண்டு அணிந்த தோழர்
தன் இனத்திற்காகச் சிறப்புத் தொண்டு புரிந்த சோழர்
கண்ட கொள்கையை என்றென்றும் தேடாதவர்
கொண்ட கொள்கையை என்றென்றும் விடாதவர்

சொந்த பந்தத்திற்கு மிகுந்த உபசரிப்பு உண்டு
பந்த பாசத்திற்குத் தகுந்த அரவணைப்பு உண்டு
தானாக வந்து எந்த வம்புக்கும் சென்றது இல்லை
தானாக வந்த எந்த வம்பையும் விட்டதும் இல்லை

தன் நில வளத்தோடு தன் குலத்தைக் காத்தவர்
தன் குல வீரத்தோடு தன் நிலத்தைக் காத்தவர்
கள்ளம் கபடமற்ற நல்ல மனமுடையக் கண்டியர்
பலம் பெற்ற நல்ல வலிமையுடையச்  சண்டியர்

என் பிரியமான பெரியம்மாவிற்கு அருமையான கணவர் என் பெரியப்பா
என் அக்காயி அண்ணய்யா தங்கச்சிக்கு அருமையான அப்பா என் பெரியப்பா!

- தஞ்சை த.இராமநாதன்

8 comments:

  1. Replies
    1. காவண்ணா மாமா நேர்மையின் தலைவர்
      முன்மாதிரியானவர்,அவருக்குப் பின் யாருமில்லை சொசைட்டித்தலைவர் சொசைடிக்கே தலைவர்
      மறக்க முடியாத சிறந்த மனிதர் அவர்தம் நினைவைப் போற்றுவோம்

      Delete
  2. இதுவரை கண்டறியாத கண்டியர் வாழியவே! அள்புடன்,குவளைமணியன்.

    ReplyDelete
  3. அப்பாவின் வாழ்கையை கவிதையில் வடித்த இராமநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.
    அன்புடன் மோகன் வைரக்கண்ணு

    ReplyDelete