Monday, 23 October 2023

ஆயுதமும் பூஜையும்

 

ஆயுதமும் பூஜையும்

அறுவை சிகிச்சை செய்வோருக்கும் ஆயுதம் உண்டு
அறுத்து சர்ச்சை செய்வோருக்கும் ஆயுதம் உண்டு
ஆலையில் வெட்டும் வேலைக்கும் ஆயுதம் உண்டு
ஆளை வெட்டும் வெட்டி வேலைக்கும் ஆயுதம் உண்டு
இரும்பை உருக்கும் இடத்திலும் ஆயுதம் உண்டு
ஈயத்தை உருக்கும் இடத்திலும் ஆயுதம் உண்டு
உழைத்து மரிவோருக்கும் ஆயுதம் உண்டு
ஊதாரியாய்த் திரிவோருக்கும் ஆயுதம் உண்டு
எதார்த்தமாய் வாழ்வோர்க்கும் ஆயுதம் உண்டு
ஏமாற்றியேப் பிழைப்போர்க்கும் ஆயுதம் உண்டு
ஐம்புலன்களின் ஐக்கிய நிலைக்கும் ஆயுதம் உண்டு
ஐம்புலன்களின் அயோக்கிய நிலைக்கும் ஆயுதம் உண்டு
ஒட்டி உறவாடி வீழ்த்துவோருக்கும் ஆயுதம் உண்டு
ஓடி உறவாடி வீழ்வோருக்கும் ஆயுதம் உண்டு

இத்தனை ஆயுதங்களுக்குப் பூஜையைப்        போட ஆயத்தமானாலும்...
கல்வியெனும் ஆயுதத்திற்கு அறிவோடு பூஜையைப் போட ஆயத்தமாவோம்!

- தஞ்சை த.இராமநாதன் 

6 comments:

  1. அருமை🌹😊

    ReplyDelete
  2. மகிழ்ச்சி! சிறப்பு! மனிதர்களின் நாக்கும் ஒரு ஆயுதம்தான் அய்யா! குவளை மணியன்

    ReplyDelete
  3. சிறப்பாக உள்ளது ஆயுத பூஜை கவிதை

    ReplyDelete