ஆயுதமும் பூஜையும்
அறுவை சிகிச்சை செய்வோருக்கும் ஆயுதம் உண்டு
அறுத்து சர்ச்சை செய்வோருக்கும் ஆயுதம் உண்டு
ஆலையில் வெட்டும் வேலைக்கும் ஆயுதம் உண்டு
ஆளை வெட்டும் வெட்டி வேலைக்கும் ஆயுதம் உண்டு
இரும்பை உருக்கும் இடத்திலும் ஆயுதம் உண்டு
ஈயத்தை உருக்கும் இடத்திலும் ஆயுதம் உண்டு
உழைத்து மரிவோருக்கும் ஆயுதம் உண்டு
ஊதாரியாய்த் திரிவோருக்கும் ஆயுதம் உண்டு
எதார்த்தமாய் வாழ்வோர்க்கும் ஆயுதம் உண்டு
ஏமாற்றியேப் பிழைப்போர்க்கும் ஆயுதம் உண்டு
ஐம்புலன்களின் ஐக்கிய நிலைக்கும் ஆயுதம் உண்டு
ஐம்புலன்களின் அயோக்கிய நிலைக்கும் ஆயுதம் உண்டு
ஒட்டி உறவாடி வீழ்த்துவோருக்கும் ஆயுதம் உண்டு
ஓடி உறவாடி வீழ்வோருக்கும் ஆயுதம் உண்டு
இத்தனை ஆயுதங்களுக்குப் பூஜையைப் போட ஆயத்தமானாலும்...
கல்வியெனும் ஆயுதத்திற்கு அறிவோடு பூஜையைப் போட ஆயத்தமாவோம்!
- தஞ்சை த.இராமநாதன்

அருமை🌹😊
ReplyDelete🙏🙏
Deleteமகிழ்ச்சி! சிறப்பு! மனிதர்களின் நாக்கும் ஒரு ஆயுதம்தான் அய்யா! குவளை மணியன்
ReplyDelete🙏🙏
Deleteசிறப்பாக உள்ளது ஆயுத பூஜை கவிதை
ReplyDelete🙏🙏
Delete