Sunday, 22 October 2023

பெருமைமிகு ஆம்பலாப்பட்டு அய்யாவு மாதிரார் (25வது வருட நினைவு நாள் 24 Oct 2025)

 

அயராத உழைப்புக்குத் தயங்காதவர்
ஆடம்பர வாழ்க்கைக்கு மயங்காதவர்

இயல்பான வாழ்வில் மேன்மையானவர்
ஈவு இரக்கக் குணத்தில் மென்மையானவர் 

உழைப்பால் உயர்வை அடைந்து காட்டியவர் 

ஊரினில் முதலில் மாடி வீட்டைக் கட்டியவர்

எளிய வாழ்க்கையுடன் ஏற்றம் கண்டவர்      ஏற்றமிகு கொள்கையுடன் மாற்றம் கண்டவர்

ஐயாவெனும் அழகான முருகையா இவர் ஒப்பற்ற அருமையான அய்யாவு இவர்

ஓயாது தன்னுடன் குடையோடு இருந்தவர் ஔவியம் இன்றி அடக்கத்தோடு இருந்தவர்

எஃகைப் போல் அடித்தளம் இட்டு எம் குலம் காத்தவர்! 

குபேரனைப் போன்ற வேந்தர் என் தாத்தா    இப்பேரனுக்குப் பாடல் வேந்தர் என் தாத்தா      இவரைப்போல் எவரென வாழ்ந்தவர் என் தாத்தா                                                      அவரைப்போல் நானென என்னை வாழ்த்தியவர் என் தாத்தா                                      நாமறிந்த நல்லவர் ஆம்பல் கண்டியர் தெரு தாத்தா                                                                            நானறிந்த வல்லவர் என் அம்மாச்சி வீட்டுத் தாத்தா!

- தஞ்சை த.இராமநாதன்

20 comments:

  1. அருமை 🙏

    ReplyDelete
  2. மிக நன்று!

    ReplyDelete
  3. நல்ல பாராட்டுக் கவிதை!

    ReplyDelete
  4. I have seen his robustness.. fine memories…

    ReplyDelete
  5. Good tribute to you ancestors

    ReplyDelete
  6. மிக நன்று!

    ReplyDelete
  7. தாத்தாக்களை மறந்துவரும் காலத்தில். தாத்தாவிற்கு தலைமீதுஇடம் கொடுத்த தங்களுக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete
  8. தந்தையின் பாராட்டு கவிதை மிகவும் அருமை

    ReplyDelete