Friday, 22 September 2023

சரக்கில் பல சரக்கு இருக்கு

 

சரக்கில் பல சரக்கு இருக்கு

இருந்த சரக்கில் பல சரக்கும் இருக்கு
இருக்கும் சரக்கில் பழ சரக்கும் இருக்கு
இருந்த சரக்கு பழைய சரக்கா இருக்கு இருக்கும் சரக்கு புது சரக்கா இருக்கு

இருந்த சரக்கு பேசும்வரை இருக்கு
இருக்கும் சரக்கு பேசாதவரை இருக்கு
இருந்த சரக்கு விற்காதவரை இருக்கு இருக்கும் சரக்கு விற்கும்வரை இருக்கு

குடிப்பைச் சரக்கென்பது மனக் கிறுக்கு
புகைப்பைச் சரக்கென்பது இனக் கிறுக்கு
பெண்ணை சரக்கென்பது ஈனக் கிறுக்கு
மண்ணை வெறுப்பதோ ஊனக் கிறுக்கு

தமிழன் என்பதில் தன்மானம் இருக்கு
தமிழ் என்பதில் தனிமணமே இருக்கு!

- தஞ்சை த.இராமநாதன்

4 comments:

  1. இந்த சரக்கில் எங்களுக்கு என்ன இருக்கு? உங்கள் சரகக்கு நல்ல முறுக்கு.வாழ்த்துகள்! குவளை மணியன், கோவை.

    ReplyDelete
  2. அருமை👍

    ReplyDelete