பாரத பரதத்தில் புதுமை
அங்க அசைவின் வெளித் தோற்றத்தில் பழமைக் காட்சியைக் கோர்ப்போம்
அங்க அசைவில் உள்ளப் பொருளில் புதுமைச் செய்தியைச் சேர்ப்போம்
தெரியாத கதையைத் தெரியப்படுத்த ஆடிய ஆட்டத்தை அப்படியே ஆடுவோம்
தெரிந்த கதையைத் தெளிவுபடுத்த கருத்துடைய ஆட்டத்தை ஆடுவோம்
அழியாப் பூதங்களை இன்னிசையோடு சேர்த்து பாவனையைக் கூட்டுவோம்
அழியும் சோகங்களை இயற்கையோடு சேர்த்து வேதனையைக் காட்டுவோம்
கொதிக்கும் சூரியனின் சூட்டோடு
பரதத்தில் பாடுவதைச் சேர்ப்போம்
உடையும் ஓசோனின் ஓட்டையோடு
பாரதத்தில் பரதத்தைப் பார்ப்போம்
அகச்சிவப்பு கதிர்கள் ஊடுருவுலோடு
புறத்தின் கேவலத்தைக் காண்பிப்போம்
புற ஊதா கதிர்கள் கூடும் உடலோடு அகத்தின் அவலத்தைக் காண்பிப்போம்!
- தஞ்சை த.இராமநாதன்

அருமை வாழ்த்துகள்!
ReplyDelete🙏🙏
ReplyDelete