தொட்டால் குத்தும்
கையைக் கொடுக்கும்போதே கையில் பட்டதும் உணரலாம் பாச நேசத்தை
கையைக் கொடுக்கும்போதும் கையின்
வலியில் உணரலாம் மோச வேஷத்தை
கையை எடுக்கும்போதே முகத்தின் சிரிப்பில் பார்க்கலாம் நேச பாசத்தை
கையை எடுக்கும்போதும் முகத்தின் கரிப்பில் பார்க்கலாம் வேஷ மோசத்தை
கை கொடுக்கும் கையை கையோடு கோர்த்தால் உணரலாம் பாச நேசத்தை
கையோடு கை சேர்த்து நெறித்தால் உணரலாம் மோச வேஷத்தை
ரோஜாப் பூவைத் தொடாது உணரலாம் இதழ் தந்திட்ட மயக்கும் வாசத்தை ரோஜாப் பூவைத் தொட்டால் உணரலாம் முள் குத்திட்ட விரலில் காயத்தை!
- தஞ்சை த.இராமநாதன்

நன்று!
ReplyDelete🙏🙏
Delete