வாழ்ந்தோரும் - வீழ்ந்தோரும்
கை கொடுத்துத் தூக்கிவிட்டால்
தூக்கியவர் வாழ்ந்ததுண்டு
வாய் கொழுத்துத் தாக்கிவிட்டால்
தாக்கியவர் வீழ்ந்ததுண்டு
புத்தியைக் கூர்மையாக்கி
பேசியவர் வாழ்ந்ததுண்டு
கத்தியைக் கூர்மையாக்கி
குத்தியவர் வீழ்ந்ததுண்டு
உறவைக் கட்டிக் கொண்டாடி
புகழ்ந்தோர் வாழ்ந்ததுண்டு
உறவை வெட்டித் துண்டாடி
இகழ்ந்தோர் வீழ்ந்ததுண்டு
மரபைக் கொண்டாடித் தூக்கி
போற்றியோர் வாழ்ந்ததுண்டு
மானத்தை மறந்து மனித மரபை
தூற்றியோர் வீழ்ந்ததுண்டு
உரிமைக்காகப் போராடியோர் இறந்தாலும் வாழ்வதுண்டு பெருமைக்காகப் போராடுவோர் இருந்தாலும் வீழ்வதுண்டு
உண்மையாக உழைத்து வாழ்வோர் வறுமையோடு வாழ்வதுண்டு
ஏய்த்துப் பிழைத்து வாழ்வோர் வெறுமையோடு வீழ்வதுண்டு!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment