எப்படி இதையெல்லாம் மறந்தீரோ?
எத்தனையோ காலங்களைக் கடந்தீர் அத்தனைக் காலங்களையும் மறந்தீர்
எத்தனையோ தடைகளைத் தகர்த்தீர்
தடைகள் தகர்ந்ததையும் மறந்தீர்
எத்தனையோ படங்களைப் பார்த்தீர் படங்களின் பாடங்களை மறந்தீர்
எத்தனையோ பாடல்களைக் கேட்டீர்
கேட்டப் பாடல்களையும் மறந்தீர்
எத்தனையோ பாதைகளில் நடந்தீர்
பாதைகளின் வழிகளை மறந்தீர்
எத்தனையோ முகங்களைப் பார்த்தீர்
முகங்களில் வலிகளையும் மறந்தீர்
எத்தனையோ வேளைகளில் மகிழ்ந்தீர் மகிழ்ந்த வேலைகளை மறந்தீர்
எத்தனையோ துயரங்களில் ஒடிந்தீர்
ஒடிந்த உயரங்களையும் மறந்தீர்
எத்தனையோ தருணங்களில் கரைந்தீர் கரைந்தக் காரணங்களை மறந்தீர்
எத்தனையோ நிறங்களில் வரைந்தீர் வரைந்த நேரங்களையும் மறந்தீர்
இத்தனை வரிகளை இவ்வளவு வேகத்தில் படித்தீர்!
அத்தனை வரிகளையும் அவ்வளவு வேகத்தில் மறப்பீர்!
யாரும் அடுத்தவர் சொன்ன சொல்லை கேட்டகப் போவதுமில்லை!
சொல்பவரோ சொல்வதை சொல்லாமல் நிறுத்தப் போவதுமில்லை!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment