உலகத்தின் பார்வையில் புகழைப் பெற்றது தஞ்சை பெரிய கோயில் இந்தியாவின் போர்வையில் புகழைப் பெறாதது தஞ்சை பெரிய கோயில்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர்மூழ்கிக் கப்பலை இயக்கியோர் சோழர்ப் பரம்பரை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் மறைத்தாலும் மறையாதோர் சோழர்ப் பரம்பரை
கோயிலையும் அணையையும் கட்டி வளமுடன் வாழ்ந்தப் பரம்பரை சோழர்ப் பரம்பரை தின்னச் சோற்றைக் கொடுத்தோரை சேற்றால் அடிக்க நினைப்போரோ கோழைப் பரம்பரை
உலகமே வியந்து போற்றுகிறது இராஜராஜ சோழனின் புகழை இந்தியாவோ ஒளித்து ஏமாற்றுகிறது இராஜராஜ சோழனின் புகழை
சதயத் திருவிழா பழம்பெரும் புகழுடைய தஞ்சாவூராருக்கு மட்டுமா? தமிழ்நாடே கொண்டாடும் பாக்கியம் பலபேருக்கும் கிட்டுமா?
அன்று ஆண்டோரின் அருள் தமிழ்நாட்டை அவ்வப்போது ஆள்வோருக்கும் கிடைக்குமா? பாரதமே கொண்டாடும் பாக்கியம் கிடைக்க இந்திய அரசு சரித்திரம் படைக்குமா?
- தஞ்சை த இராமநாதன்
1 Nov 2025 (Rev 2)

சிந்திக்க வேண்டிய அருமையான கவிதை!
ReplyDelete🙏
DeleteSuper 👌 sir
ReplyDelete🤝
ReplyDeleteஉண்மை , நாம் அடிமையாக உள் ளோம் என்பதே உண்மை
ReplyDeleteநாம் அடிமைகளும் கிடையாது. நாம் அடிமைகளாக இருக்கவும் கூடாது. மீட்டெடுக்க வேண்டும் நமது வீரம் கலந்த பெருமையை.🤝
ReplyDelete