Thursday, 4 August 2022

நம்பிக்கை

 

நம்பிக்கை

கடன் வாங்கினால் கடனைக் கொடுத்து விடலாம் என்பது ஒரு சாரார் நம்பிக்கை
கடன் கொடுத்தால் கடனை வாங்கி விடலாம் என்பது மறு சாரார் நம்பிக்கை
கடவுள் துன்பத்தைத் தரவே மாட்டாரென  நினைப்பது ஒரு சாரார் நம்பிக்கை
துன்பம் வந்தாலும் நீக்குவார் கடவுள் என நினைப்பது மறு சாரார் நம்பிக்கை
தேர்தலில் வெற்றிப் பெறலாம் என நினைப்பது அரசியல்வாதி நம்பிக்கை
தேர்தலுக்குத் தேர்தல் பணம் கிடைக்கும் என நினைப்பது வாக்காளர் நம்பிக்கை
தன் பிள்ளைகள் நற்பெயரை எடுப்பர் என்பது பெற்றோரின் நம்பிக்கை
நற்பெயரை எடுக்க முடியுமாவென பிள்ளைகள் நினைப்பது அவநம்பிக்கை
இப்படித்தான் சம்பாதிக்க வேண்டுமென நினைப்பது தரமான நம்பிக்கை
எப்படியும் சம்பாதித்து விடாலாமென நினைப்பது தரங்கெட்ட நம்பிக்கை
எந்த நிலை வந்தாலும் யானைக்குப் பலமாக இருப்பது அதன் தும்பிக்கை
மந்த நிலை வந்தாலும் மனிதனுக்குப் பலமாக இருப்பது தன் நம்பிக்கை!

- தஞ்சை த இராமநாதன்


2 comments: