முடிந்த போதும் முடியாத போதும்
முடிந்தபோது முடியாததைப் பற்றி நினைக்க முயன்றதுமில்லை
முடியாதபோது முடிந்ததைப் பற்றி நினைக்க முடிவதுமில்லை
முடிந்தபோது முடிந்த உதவியை செய்யாமல் இருந்ததுமில்லை
முடியாதபோது முடிந்தவர்கள் உதவியை நாடி இருந்ததுமில்லை
முடிந்த கால உதவிகளைப் பெற்றோர் முழுதாகப் போற்றுவதுமில்லை
முடியாத கால உதவிகளைப் பெற்றோர் முழுதாகப் பெறப் போவதுமில்லை!
- தஞ்சை த இராமநாதன்

மிக அருமையான கவிதை ஐயா!
ReplyDeleteமிக நன்று 👌👌👏🏽👏🏽👏🏽👏🏽
Delete