பட்டுக்கோட்டையார் பார்வையில்...
பொய்யான மாயப் பேய்களைப் பாட்டில் சொன்னேனே!
மெய்யான மனிதப் பேய்கள் நாட்டில் வந்ததேனோ?
திருடாதே திருடாதே என்று அன்றே சொன்னேனே!
திருடித் திருடி சேர்த்திடு அதுவும் இன்றே என்றானதேனோ?
தூங்காதே தூங்காதே என்று முன்னே சொன்னேனே!
தூங்காது தூங்காது கேபேசி முன்னே என்றானதேனோ?
பகுத்தறிவோடு படிப்பறிவைச் சேர்த்துச் சொன்னேனே!
அறிவும் படிப்பும் பணத்தோடு சேர்ந்தது
என்றானதேனோ?
- தஞ்சை த இராமநாதன்

💐💐🌷🌷🌷🌷
ReplyDeleteசிறப்பு!
அன்புடன்,
குவளை மணியன்.