அங்கீகரிக்கப்படாத அம்பேத்கர்
உலகளவில் அறிவோடு பல பட்டங்களைப் பெற்றார்
இந்தியளவில் உணர்வோடு பல கஷ்டங்களைப் பெற்றார்
இருக்கும்போது இந்தியத் தேர்தலில் அவருக்கு பாடத்தைக் கொடுத்தனர்
இல்லாதபோது இந்தியத் தேர்தலில்
அவரின் படத்தை போட்டுக் கெடுத்தனர்
அவர் பிறந்து வளர்ந்து இருந்தபோது இருந்த மதம் வேறு
அவர் துறந்து இறந்து மறைந்தபோது இருந்த மதம் வேறு
படிக்காதப் பேதைகள் அம்பேத்கரை நம்மவர் என்பதை நிறுத்த வேண்டும்
மதவெறிப் பதர்கள் அம்பேத்கரை நம்மவர் என்பதையும் நிறுத்த வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்

Good one
ReplyDelete