Sunday, 6 February 2022

மாறிப் போனது காலம்

 

😢மாறிப் போனது காலம்😭 

அப்பா இருக்கும் வரை அப்பாவின் அருமை அதிகம் தெரிவதில்லை                                அப்பா இருக்கும் வரை அப்பாவின் அர்ப்பணிப்பு அதிகம் புரிவதில்லை 

அழுத போதெல்லாம் அழாதே என சொல்லாமல் அப்பா இருந்ததில்லை          இனி அழும் போதெல்லாம் அழாதே என சொல்ல அப்பா இருக்கப் போவதில்லை 

அனைவர் கையிலும் கைபேசி அடக்கம் அப்பாவின் உடலோ பெட்டியில் முடக்கம்  அழுதுத் துடிக்க பிள்ளைக்குத் தயக்கம் அழாது சமாளித்தாலும் தீராது துக்கம்! 

தஞ்சை த இராமநாதன் 

2 comments: