Wednesday, 2 February 2022

எட்டு நடைப் பயிற்சி

 

எட்டு நடைப் பயிற்சி 

நெட்டு வாக்கில் நடந்தது அப்போ                எட்டு வாக்கில் நடப்பது இப்போ    நேர்வழியில் நடந்தது அப்போ                  குறுக்கு வழியில் நடப்பது இப்போ 

எட்டு எட்டாய்த் தொடங்கியது அப்போ எட்டுக்குள்ளேயே அடங்கியது இப்போ கிழக்கு மேற்காய் வளர்ந்தது அப்போ    தெற்கு வடக்காய் தளர்ந்தது இப்போ 

உரிமம் வாங்க எட்டுப் போட்டது அப்போ  உபாதை நீங்க எட்டுப் போடுவது இப்போ ஏட்டுக்காக கவிதை எழுதியது அப்போ எட்டுக்காகவும் கவிதை எழுதுவது இப்போ!

- தஞ்சை த இராமநாதன் 


4 comments: