ஆத்மா-மகாத்மா-பரமாத்மா
தான் பிறந்த மதக் கொள்கைகளுடன் தரமானக் குடும்பத்தில் பிறந்த ஆத்மா மதத்தை மறந்து மனிதத்தை இணைக்க முனைந்து உயிரைத் துறந்த மகாத்மா
லண்டனில் உயர்வான சட்டம் பயின்று ஆப்பிரிக்காவில் திட்டம் தீட்டிய ஆத்மா மிடுக்கான ஆடை அணிவதைத் துறந்து வேட்டி துண்டை அணிந்த மகாத்மா
செய் அல்லது செத்து மடி முழக்கத்தை முழங்கி செத்து முடிந்த ஆத்மா சுட்டவனை மன்னித்து விடச் சொல்லி ராம் ராம் எனச் சொல்லி சரீரத்தை விட்ட மகாத்மா!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment