மறுத்து மறைப்பது நியாயமா?
பண்டையத் தமிழர்களின் பங்களிப்பை மறப்பது நியாயமா? விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகளை மறைப்பதும் நியாயமா?
அருள்மொழித் தேவன் இராஜராஜ சோழன் பெருமையைத் தவிர்க்க முடியுமா? வாகை சூடிய இராஜேந்திர சோழனின் மகிமையைத் தகர்க்க முடியுமா?
தெய்வப் புலவர் திருவள்ளுவரின் புகழை யாராலும் மறைக்க முடியுமா? யாதும் ஊரே என்றக் குன்றனாரின் புகழை யாராலும் குறைக்க முடியுமா?
அரசியல் அசிங்கங்கள் அரங்கேறுவதை அரசியல்வாதியால் மறுக்க முடியுமா? ஆதாயத்திற்காக ஆற்றை இறைப்பதை இறைப்பவரால் மறைக்க முடியுமா?
கடவுள் உண்டென நம்பும் தமிழர்களே அதிகம் என்பதை மறுக்க முடியுமா? கடவுளைத் திட்டினால் காசுக்காக கை தட்டாமல் அவர்களால் இருக்க முடியுமா?
தமிழ்க் கடவுள் முருகன்தான் என்பதை பரம்பரைத் தமிழனால் மறுக்க முடியுமா?பாட்டில் கிடைத்தால் முருகனை மறந்து காவடித் தூக்காமல் இருக்க முடியுமா?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment