ஆமைகளும் வாழட்டும்
முட்டையிட இடம்தேடி குழிதோண்டி முட்டையிட்டு குழியை மூடிடும் ஆமைகள் மூடிய முட்டையைத் தோண்டி எடுத்து முட்டையைத் தின்றிடும் நாட்டாமைகள்
ஆயிரம் ஆமைகளில் ஒன்று தப்பினால் 150 வயதுவரை வாழ முடியும் ஆமையால் ஆயிரத்தில் தொள்ளாயிரம் ஆமைகள் பிழைத்திடும் ஊன் உண்ணாமையால்
கறியோடு ஓடுக்காக அழிக்கப்பட்டாலும் விவேகத்துடன் பிழைக்கின்றது ஆமை ஓடிப் பிழைத்து மண்ணில் வாழ்ந்து தன் இனத்தைக் காக்கின்றது ஆமை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment