முருகா என்றதும் முதலில் தோன்றுவது சுப்ரமணியரான முள்ளூர் முருகன்
பக்தர்களின் பகுத்தறிவுப் பக்திக்கு அருளை வழங்கும் பட்டுக்கோட்டை முருகன்
மலையில்லாத ஊரையே மலையாக்கிய தஞ்சை பூமியில் சுவாமிமலை முருகன்
ஆண்டியானாலும் ஆண்டாண்டாக இனிக்கும் பஞ்சாமிர்தம் வழங்கும் பழநி முருகன்
கடலோரத்தில் வீற்று அருளாட்சியை ஆளும் கருணைமிகு திருசெந்தூர் முருகன்
தேவயானை தெய்வீக உறவின் உறுதியுடன் முதல்படையில் திருப்பரங்குன்றம் முருகன்
தணிய வேண்டிய கோபத்தைத் தணித்து தரணி காக்கும் திருத்தணி முருகன்
சைவ வைணவத்தை ஒன்றுப்படுத்தி நாம் என்ற நாமத்தின் பழமுதிர்ச்சோலை முருகன்
பலயின பக்தர்களைக் கவர்ந்து ஈர்த்து தங்க கோலத்தின் பத்துமலை முருகன் (மலேசியா)
அறுபடை வீடுகளைத் தூண்களில் கொண்ட tank சாலை சக்திமிகு முருகன் (சிங்கப்பூர்)
எம்குடியிருப்புக்கு அருகிலேயே உம் குடியாம் Bukit Panjang முருகன் (சிங்கப்பூர்)
எல்லோரும் நல்வழியில் என்றும் இன்புற்று துன்பம் அற்று வாழ வழி காட்டும் முருகன்!
- தஞ்சை த இராமநாதன்

மிக நன்றாக எழுதி இருக்கிறார்கள் தமிழ் கடவுள் முருகன் பற்றி...
ReplyDeleteதமிழ்க்கடவுள் முருகனுக்கு தக்க புகழாரம்.
ReplyDelete