Monday, 6 December 2021

தோகையை விரித்தது ஆண் மயில்

 

தோகையை விரித்தது ஆண் மயில் 

ஆடத் தெரிந்தது ஆண் மயில் 

ஆடும் விதத்தைத் தெரிந்தது ஆண் மயில்

தோகையை விரிக்கும் ஆண் மயில் 

துணையை நேசிக்கும் ஆண் மயில்


மழையை வரவேற்கும் ஆண் மயில்

மனையாளை மகிழ்விக்கும் ஆண் மயில் 

வண்ணமிகு தோகையுடன் ஆண் மயில்

தொகைமிகு தோகையுடன ஆண் மயில்


நீலப் பச்சை நிறத்தில் ஆண் மயில் 

கவரும் நிற அழகினில் ஆண் மயில்

கண் வடிவம் தோகையில் ஆண் மயில் 

அழகான தோற்றத்தில் ஆண் மயில் 


என்றும் நேசப் பறவை மயில் 

இன்றும் தேசப் பறவை மயில் 

தமிழர் பண்பாட்டில் கலந்தது மயில் 

தமிழர் வழிபாட்டில் கலந்தது மயில்!


- தஞ்சை த இராமநாதன் 




1 comment: