Monday, 6 December 2021

வெட்டி வேலை வேண்டாம்

 

வெட்டி வேலை வேண்டாம் 

எதை வெட்ட வேண்டுமென அறிந்து வெட்டினால் அது புத்திசாலித் தனம்            எதை வெட்டக் கூடாதோ அதை      வெட்டினால் அது பித்துக்குளித் தனம் 

வேண்டிய அளவு வெட்டி நீர் நிலையைக் காத்தால் அது அறிவாளித் தனம்          வெட்டித் தனமாய் வெட்டிக் கொண்டே போனால் அது அறிவிலித் தனம்

தூர்க்க வேண்டியதை தூர்க்கா விட்டால் அறிவற்றப் பதர்களின் குருட்டுத் தனம் தூர்வார வேண்டியதை வாரா விட்டால்          அது குள்ள நரிகளின் திருட்டுத் தனம் 

மரத்தை வெட்டி செதுக்கி உபயோகம் ஆக்கினால் அது கெட்டிக்காரத் தனம்      மரத்தை வெட்டிப் பதுக்கி வியாபாரம் செய்தால் அது அயோக்கியத் தனம்!

- தஞ்சை த இராமநாதன் 

1 comment: