Saturday, 4 December 2021

உழைப்பின் உன்னதம்

 

உழைப்பின் உன்னதம் 

பூவைப் பறிக்கத் தேவை உழைப்பு 

பூவைக் கோர்க்கவும் தேவை உழைப்பு

மாலையைக் கட்டத் தேவை உழைப்பு 

தோரணம் கட்டவும் தேவை உழைப்பு


அழகாய் உடுத்தத் தேவை உழைப்பு 

நலமாய் வாழத் தேவை உழைப்பு 

சுமையைச் சுமக்கத் தேவை உழைப்பு

சுகமாய் சுமக்கவும் தேவை உழைப்பு 


வேலைக் கொடுக்கத் தேவை உழைப்பு

வேலைக் கிடைக்கவும் தேவை உழைப்பு  

ஏய்க்காமல் பிழைக்கத் தேவை உழைப்பு

ஏய்த்துப் பிழைக்கத் தேவையே இல்லை உழைப்பு!

தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment