ஆட்டுக்கல் மாவுக்கு இணையாகுமா?
அரைத்த மாவையே அரைத்து முடித்து அரைத்து முடித்த மாவை அள்ளி எடுத்து ஒரு நாள் இரவு முழுதும் புளிக்க வைத்து புளித்த மாவின் இட்லியை பிட்டு எடுத்து சட்னியோடு சேர்த்து வாயில் வைத்து காரம் குறைய நல்லெண்ணெய் சேர்த்து விக்கல் வந்தால் சிறிது நீரைக் குடித்து பஞ்சுபோல் என பாராட்டுக் கொடுத்து பக்குவமாய் இன்னும் மூன்றை சேர்த்து போதும் போதும் எனும்வரை சுவைத்து கடைசியில், நமது ஆட்டுக்கல் இட்லி போல் இல்லையே என ஏங்க வைத்த இயந்திரக் கல்லே!
- தஞ்சை த இராமநாதன்
Correct. Athan suvaiye Thani.
ReplyDelete