Thursday, 30 December 2021

கல்லிலே கடவுளைக் காணலாம்

 

கல்லிலே கடவுளைக் காணலாம் 

மலையிருந்தால் மலையைக் குடைந்து கோவிலைக் கட்டிக் காட்டியவர்கள் நாம் கட்டியக் கோவிலில் கடவுளைக் காட்டி வணங்க வைத்துக் காட்டியவர்கள் நாம் 

மலையில்லா இடத்திலும் கல்லை உடைத்து கோவிலைக் கட்டிக் காட்டியவர்கள் நாம்    கட்டியக் கோவிலில் கல்லினுள் கடவுளை வடிவமைத்து காட்சிப்படுத்தியவர்கள் நாம் 

சிறப்பான சிலைகளை உளியால் செதுக்கி கோவிலைக் கட்டிக் காத்தவர்கள் நாம்    அற்புதமான அதிசயங்களுடன் கடவுளால்  கட்டிக் காக்கப்படுபவர்கள் நாம்!

தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment