அங்கேயும் இங்கேயும்
கிராமத்தில் மாவினால் கோலத்தைப் போட்டு விட்டால் குதூகலமான வாழ்வை வாழ்வதாக அர்த்தமா?
கிராமத்தின் அலங்கோலத்தை கோடிட்டுக் காட்டாததால் கோலாகலமாக வாழ்வதாக அர்த்தமா?
வாய்க்கால் வரப்பு சண்டைகள் வரம்பை மீறி அடிதடிகள் நடப்பது இல்லையா?
பக்கத்து வீட்டாருடன் பகையை வளர்த்து பழிப்பேசி பிதற்றுவது இல்லையா?
நாய்கள் ஜாக்கிரதை என உள்ளதை உள்ளபடி சொல்வதில் தவறே இல்லை
கோலமிட்டு கும்மி அடித்து உள்ளடி வேலை செய்வதில் தவறா இல்லை?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment