பாகனின் பிடியும் களிறும்
யானை வாழ்வதும் ஆயிரம் பொன்னோடு!
யானை இறப்பதும் ஆயிரம் பொன்னோடு!
ஆடி-ஆடி ஆடி வரும் யானை!
ஆட்டி வைக்கப்படும் யானை!
உண்டதை அசை போடாத யானை!
கண்டதை உண்ணாத சைவ யானை!
பெரிய கால்களால் மனிதனை மிதிக்கத் தெரிந்த யானை!
சிறிய மனிதனின் ஆணையை மதிக்கத் தெரிந்த யானை!
கோயில்களின் முன் நின்று வசீகரிக்கும் யானை!
பிள்ளையாராகி பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் யானை!
மதம் பிடிக்கவில்லையேல் அது கெத்தான யானை!
மதம் பிடித்தால் மனிதனைப் போல் பித்தான யானை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment