Friday, 1 October 2021

அப்படி- இப்படி- எப்படி?

 

அப்படி- இப்படி- எப்படி?

அப்படிப் பார்த்தால் இப்படியும் இப்படிப் பார்த்தால் அப்படியும் தெரியுது

அப்படித் தெரிவது உண்மையானால் இப்படித் தெரிந்தது பொய்யாகுது

இப்படித் தெரிவது உண்மையானால் அப்படித் தெரிந்தது பொய்யாகுது

அப்படியோ இப்படியோ எப்படிப் பார்த்தாலூம் எல்லாம் பொய்யாகுது

அப்படி இப்படி பொய்யைப் பொய்யாக்கி எப்படியோ கவிதை மெய்யாகுது!

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment