புதுமை உருவில் மடமை
புதியன புகுதலில் தவறில்லை; மடமையில் வீழ்வதில் தவறில்லாமலில்லை
முறையற்றக் கல்வியால் பயனில்லை; பயனற்றப் பாடலில் பல்லவியுமில்லை
புதுமை யாவும் புரிவதுமில்லை; புரிந்தபின் புதுமை புதுமையுமில்லை
பழமை யாவும் புரியாததுமில்லை; புரிந்ததால் பழமை தாழ்ந்ததுமில்லை
புதுமை யாவும் புனிதமுமில்லை; பழமை யாவும் வீணானதுமில்லை
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment