Sunday, 5 September 2021

எங்கே சென்றது இரத்தப் பாசம்?

 

எங்கே சென்றது இரத்தப் பாசம்?

அண்ணனைக் கண்டதும் கனிவான முகத்துடன் உளம் குளிரும் தங்கை

தங்கையைப் பார்த்ததும் பாசமான நேசத்துடன் ஆரத்தழுவும் அண்ணன்

சிறுவர்களாய் இருக்கும்வரை பெரிய உள்ளத்துடன் ஆரம்பமாகும் உறவு

பெரியவர்களாகி இறக்கும்வரை சிறிய உள்ளத்துடன் முடிந்திடும் உறவு

சீர்வரிசை சீதனம் என தகுதிக்கேற்ப மகிழ்வோடு மணம் முடித்தது ஒரு காலம்

பணப் பிரச்சினையால் பலவித மனப் பிரச்சினையோடு முடிவது நிகழ் காலம்

பத்து வயதில் பங்காளியாகி பின் பகையாளிகின்ற அவலம் மாறுமா?

பாச மலர் ஓடிய காலம் மாறினாலும்          பாகப் பிரிவினை ஓடும் காலமும் மாறுமா?

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment