Saturday, 4 September 2021

திருட்டுத் தேன்

 

திருட்டுத் தேன் 

பறந்து பறந்து சேர்த்தத் தேனியின் தேன் அடையைச் சிதைப்பதேன்? 

போட்டிப் போட்டுத் திருடும் திருட்டில் திருப்தி  அடைவதேன்?

மீண்டும் மீண்டும் திருடி திருட்டே தொழிலாகிப் போனதேன்? 

உழைக்காமல் உட்கார்ந்து திருடியே திருட்டோடு வாழ்வதேன்?

தேனியைப் போல் உழைத்தவர் எல்லாம் ஏமாந்துப் போவதேன்?

திருடிச் சேர்ப்பவன் பையில் பணம் தொடர்ந்து அதிகரிப்பதேன்?

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment