Saturday, 4 September 2021

அசுத்தத்தை அகற்றுவோம்

 

அசுத்தத்தை அகற்றுவோம்

கடற்கரைக்கும் ஒரு நாளை ஒதுக்கி; அன்று மட்டும் குப்பையைப் பொறுக்கி

பொறுக்கியக் கரையை கூட்டிப் பெருக்கி; பெருக்கியதைக் கழிவாக ஒதுக்கி

ஒதுக்கியதை அழித்திடுவர் பொசுக்கி; முடிவு கண்டிடுவர் அதைக் கருக்கி 

குப்பையைக் கொட்டியவரும் கூடவே கூட்டுவார்; குப்பையைக் கொட்டதாவரும் கூடவே கூட்டுவார் 

குப்பையைப் பெருக்கியவரும் கூடிப் பெருக்குவார்; குப்பையைப் போட்டவரும் கூட்டிப் பெருக்குவார் 

கூடும்போது கூசாமல் குப்பையைப் போடுவார்; கூடிக் களித்தபின் குப்பையை போட்டு விட்டு ஓடுவார் 

அசுத்தப் படுத்தாமல் இருந்திருந்தால் சுத்தப் படுத்தவே தேவை இல்லை

சுய சுத்தத்தோடு இருந்திருந்தால் அசுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை

சுற்றுப் புறமே இவ்வளவு அசுத்தமெனில் அக சுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment