பூரியோடு பானி தனிப் பாணி
சாப்பிடத் தயாராய் உள்ள குட்டிப் பூரி
சாப்பிடுவதற்கு ஏதுவாய் சூடெல்லாம் ஆறி
சாப்பிடும் முன் பச்சை நிற நீரில் ஊறி
சாப்பிடும்போது சட்டையில் பட்டு நாறி
சாப்பிடுவோம் சாப்பிடும் அளவையும் மீறி!
புதுசு வந்ததும் பழசெல்லாம் மாறி
புதுசுக்கு மவுசு எக்கச்சக்கமா ஏறி
புதுசுதான் அதிகமான சத்தெனக் கூறி
புதுசு என்பதால் எளிதாக வைத்தனர் பொறி
புதுசானப் பொறிக்குப் பெயர் பானி பூரி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment