Sunday, 5 September 2021

சாலையோர சந்தை

 

சாலையோர சந்தை

ருசிமிக்க ரஸ்தாளிப் பழம்; குளிர்ச்சியான மொந்தன் பழம்

கனி மாவிளக்கில் பூவன் பழம்; தனிச் சுவையில் பச்சைப் பழம்

தாரில் காயாய் இருந்தப் பழம்; தாரோடு தாராய் பழுத்தப் பழம்

தார் ரோடு ஓரமாய் வந்தப் பழம்; தரகர் இல்லா தரமானப் பழம்

சீப்பு சீப்பாய் மாறியப் பழம்; வரிசை வரிசையாய் அமைந்தப் பழம்

சீர் வரிசையில் தாராகவும் பழம்; தாம்பூலத்தில் சீப்பாகவும் பழம்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment