ஆரம்பம் வெற்றி அடையட்டும்
பூட்டிக் கிடந்தக் காரணத்தை மறக்கக் கூடாது; திறக்கப்படும் அவசியத்தையும் மறக்கக் கூடாது
அவதிப்பட்ட அனுபவத்தை மறக்கக் கூடாது; அவசியமற்ற ஆர்ப்பரிப்பில் இறங்கக் கூடாது
தொற்று இதுவரை தொற்றாததால் இனி தொற்றாதென்று நினைக்கக் கூடாது
தடுப்பூசி பெற்று விட்டதால் தொற்று தொற்றாதென்றும் நினைக்கக் கூடாது
மூக்கோடு சேர்த்து வாயையும் மூடாமல் வகுப்பறையில் பேசக் கூடாது
தும்மும்போது அல்லது இருமும்போது மூடிய மூடியைக் கழட்டக் கூடாது
சாப்பிடும்போது எதிரெதிரே அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது
வாய் வைத்துக் குடித்தப் பானங்களை கூடிப் பகிர்ந்துக் குடிக்கக் கூடாது
வீட்டை அடைந்ததும் கையை சோப்புப் போட்டுக் கழுவுவதை மறக்கக் கூடாது
ஆடைகளை அகற்றி சோப்புப் போட்டு உடனே துவைப்பதை மறக்கக் கூடாது
அரசாங்கம் - சட்ட விதிகளை எங்கேயும் எப்போதும் தளர்த்தக் கூடாது
பெற்றோர் - செல்லம் கொடுத்து பெற்ற செல்வங்களை இழந்திடக் கூடாது!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment