Sunday, 1 August 2021

ஆண்டுக்கு ஆண்டு ஆடி

 

ஆண்டுக்கு ஆண்டு ஆடி

கோடைக்கு விடை கொடுப்பது ஆடி; குடைக்கு வேலை கொடுப்பதும் ஆடி

தவறாமல் விதைக்க வைப்பது ஆடி; தவறாமல் விளைய வைப்பதும் ஆடி

தாலிப் பெருக்கைத் தருவது ஆடி; தாலிக் கட்டுவதை தடுப்பதும் ஆடி

அம்மியை பறக்க வைப்பது ஆடி; அமைதியை சிறக்க வைப்பதும் ஆடி

உழுவோர் தொழிலை காப்பது ஆடி; உழாதோர் தொழிலை காப்பதும் ஆடி

விவசாயி திருமணத்தை தடுப்பது ஆடி; விலைவாசி உயர்வை தடுப்பதும் ஆடி

கொண்டாட்டம் நிறைந்த முன்னாள் ஆடி; கொண்டாட்டம் குறைந்த இந்நாள் ஆடி!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment