நடை பாதையில் நடந்ததைப் பேசும் நண்பர்கள்
கண்ணாடிப் போட்டு ஒரு பார்வை; கண்ணாடிப் பார்த்து ஒரு பார்வை
கைத்தடிப் பிடித்து எங்கும் நடை; பிடித்த கைத்தடி தாங்கும் எடை
வாழ்க்கைப் பயணம் தந்த நட்பு; வழிநடைப் பயணம் தரும் நட்பு
அப்படி நடந்த நடையும் இல்லை; இப்படி நடக்கத் தடையும் இல்லை
கடந்து வந்தது நடந்த காலம்; நடந்து செல்வது நடக்கும் காலம்
காலம் மாறலாம் உடையும் மாறலாம்; நடை மாறினாலும் நட்பு மாறாது!
- தஞ்சை த.இராமநாதன்
No comments:
Post a Comment