Monday, 2 August 2021

சிரிப்போடு பேசும் மொழி

  

சிரிப்போடு பேசும் மொழி 

அகத்தின் அழகு முகத்திலே; அப்பா மகள் அழகு பூரிப்பிலே

சிரிப்பே உணர்த்துது பாசத்தை; இருப்பே உணர்த்துது நேசத்தை

சிரிக்கத் தேவையில்லை புது மொழி; அழுகவும் தேவையில்லை பல மொழி

தாய் மொழிதான் சிறந்தது என்பார்; இங்கே தந்தை மொழியும் சிறக்குது பார்!

தாயைப் போல் பிள்ளை என்பார்; இந்த அப்பாவைப் போல் பிள்ளையைப் பார்

எம்மொழியில் சிரித்தாலும் ஒன்றே; நம்மொழியில் சிரித்தாலும் நன்றே!

*தஞ்சை த இராமநாதன்*

No comments:

Post a Comment