Monday, 2 August 2021

அழுக்கை அகற்றுவோர் அப்பழுக்கற்றோர்

 

அழுக்கை அகற்றுவோர் அப்பழுக்கற்றோர்

உவர் மண் கலவையில் ஊற வைத்து

வெள்ளாவியில் வெளுக்க வைத்து

அழுக்கை நீக்க கல்லில் துவைத்து

நீரில் நனைத்து முறுக்கிப் பிளிந்து

முறுக்குடன் துணியை அடுக்கி வைத்து

வேட்டியை நீலக் கலவையில் தொய்த்து

உதறியபின் புல்தரையில் காய வைத்து

துணிச் சுமையை கழுதை மேல் வைத்து

சாயங்காலத்தில் தன்மனை அடைந்து

கஞ்சிக் கலவையுடன் இஸ்திரி வைத்து

அழுக்கற்ற ஆடையை தூக்கிச் சுமந்து

துணியை அவரவர் வீட்டில் ஒப்படைத்து

மீண்டும் உவர் மண்ணில் ஆரம்பித்து

தூக்கத்தோடு பகல் கனவும் கலைந்து

எழுந்த வண்ணாருக்கு எண்பதானது வயது!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment