Tuesday, 3 August 2021

புரட்சி பொலிவுப் பெற்ற நாள் பாரதி பிறந்த நாள்

 

புரட்சி பொலிவுப் பெற்ற நாள் பாரதி பிறந்த நாள் 

அரிது அரிது பாரதியின் பிறவி அரிது; அவர்மான வீரம் அரிதிலும் அரிது

பணமில்லாத பெரும் குணக்காரர்; வீரக் குணத்தின் மனக்காரர்

உள்ளத்தில் சுத்த தேசப் பற்று; உடையிலும் அதே தேசப் பற்று

பயமறியா பகுத்தறிவுப் போராளி; பயமுறுத்தி சுற்றடித்த சூறாவளி

தமிழ் மண்ணின் சிங்க வீரமகன்; தமிழ்த் தரணியின் தங்க வைரமகன்

செல்லமான பாட்டு பாப்பா பாட்டு; செல்லம்மா வாழ்ந்ததும் சிரமப்பட்டு

தமிழரை உணர்வூட்டியத் தமிழர்; அந்நியரை அலறடித்தத் தமிழர்

தமிழ் அறிந்தோர் அறிந்தத் தமிழர்; தேசியம் காத்த தமிழ்க் கவிஞர்!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment