பனி விழும் மாதம்
மிதமான பனி விழும் மார்கழி; இதமான குளிர் தரும் மார்கழி
அதிகாலையில் பஜனைப் பாடல்; ராகம் இல்லா ராகத்திலும் பாடல்
அக்கா போட்ட அழகானக் கோலம்; அரிசியால் அந்த மாவுக் கோலம்
அக்காலம் மாறிப் போன இக்காலம்; அக்கோலம் வருவது எக்காலம்?
வாசலின் நடுவே இட்டக் கோலம்; கோலத்தால் பெற்ற பொற்காலம்
சாண உருண்டையில் பரங்கிப் பூ; பறித்துக் கொடுத்த எனக்கு பூரிப்பு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment